Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 05 DEC 1972
உதிர்வு 21 MAR 2019
அமரர் பத்மராணி பாலகிருஸ்ணன் (ஆத்தை)
வயது 46
அமரர் பத்மராணி பாலகிருஸ்ணன் 1972 - 2019 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். பருத்தித்துறை வியாபாரிமூலை பழவத்தையைப் பிறப்பிடமாகவும், வரணி தாவளை இயற்றாலையை வதிவிடமாகவும், லண்டன் Morden ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பத்மராணி பாலகிருஸ்ணன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அருமை அம்மாவே!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ?
எங்களை விட்டு பிரிந்திடவே உங்களுக்கு
என்றும் மனம் வராதே
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஓர் ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத் துயர்
எங்களை அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழிநடத்திய அந்த நாள்
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
ஆறாது அம்மா உங்கள் பிரிவுத்துயர்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

கணவனின் நினைவலைகள்

என் உயிரே உயிரே
என்னோடு சேர்ந்துவிடு
என் நினைவே நினைவே
என் நெஞ்சோடு சேர்ந்து விடு
தெய்வம் பெண் தந்தது- என் கண்கள்
தாய் தந்தது
காலம் மலர்கின்றது
கடமை தான் வருகின்றது

உங்கள் நினைவால் வாடும்
கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
சகோதர, சகோதரிகள், உற்றார், உறவினர், நண்பர்கள்...

தகவல்: பாலகிருஸ்ணன்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 24 Mar, 2019