Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 NOV 1944
இறப்பு 16 JAN 2020
அமரர் பத்மநாதன் இரத்தினேஸ்வரி (பூபதி)
வயது 75
அமரர் பத்மநாதன் இரத்தினேஸ்வரி 1944 - 2020 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கோண்டாவில் குமரகோட்டத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா, இத்தாலி Genoa ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் இரத்தினேஸ்வரி அவர்கள் 16-01-2020 வியாழக்கிழமை அன்று இத்தாலி Genoa இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா பத்மநாதன்(பத்பூ- இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜீவராணி(இத்தாலி), பாஸ்கரன்(சுவிஸ்), விஜயராணி(சுவிஸ்), பிரசாத்(இங்கிலாந்து), சுமித்திரா(இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குருபரன்தாஸ்(இத்தாலி), மதிவதனி(சுவிஸ்), காயத்திரி(இங்கிலாந்து), சஜந்தன்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சரஸ்வதி(இந்தியா), பரமேஸ்வரி(ராசாத்தி- இத்தாலி), அரியரத்தினம்(இலங்கை), காலஞ்சென்ற சீவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நல்லருளானந்தம்(கனடா), பூபாலசிங்கம்(இலங்கை), மங்கையற்கரசி(கொழும்பு), பூபதிதேவி(இந்தியா), துரைராசா(கனடா), பாலச்சந்திரன்(இந்தியா), குணசிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சஞ்ஜீகா(இத்தாலி), ரம்மிகா(இத்தாலி), பிரநேஸ்(சுவிஸ்), பிரநிதி(சுவிஸ்), சுகிந்தன்(சுவிஸ்), சுகிர்தா(சுவிஸ்), சஞ்ஜீவன்(சுவிஸ்), சவீனா(இங்கிலாந்து), அன்சிகா(இங்கிலாந்து), நிஷ்மிதா(இத்தாலி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்