சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலி, கனடா Toronto, Ontario மற்றும் Victoria, British Columbia(B.C.) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட Rev. திருமதி பத்மா சிவானந்தன் அவர்கள் 24-06-2021 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், இலங்கை அச்சுவேலியைச் சேர்ந்த காலஞ்சென்ற ராஜகாரியர், அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,
சிவா சிவானந்தன், B.Sc., (Financial Advisor Sun Life, கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற புனிதா, B.A- குமார்(கனடா), Dr. நகுலேந்திரன் - சில்வியா(சிங்கப்பூர்), சச்சி(ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர்)- சியாமளா(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரகாஷ்(B.C.Assessment Authority- கனடா) அவர்களின் அன்புத் தாயாரும்,
பன்மொழி(Dir., Island Health B.C.- கனடா) அவர்களின் அன்பு மாமியும்,
கிற்றனா(கனடா), செலீனா(கனடா), ரியானா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி - சுப்பிரமணியம்(இலங்கை), காலஞ்சென்ற சிவதாசன்(Electrical Engineer, Ceylon Electricity Board இலங்கை) - சந்திரா(கனடா), காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, யோகேந்திரன், மற்றும் Dr.மனோன்மணி - காலஞ்சென்ற சிவதொண்டன்(இலங்கை), Dr.லோகேஸ்வரி- குமாரசாமி(நியூசிலாந்து), விமலாதேவி- காலஞ்சென்ற ஜெயதேவன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
பத்மா தலைமை கணக்காளராக Jafferjee Brothers(இலங்கை) யிலும் நிதிக் கட்டுப்பாட்டாளராக Radicals Ltd.(Toronto, கனடா) விலும் கடமையாற்றினார்.
அர்ப்பணிபுள்ள பத்மா, Master's College and Seminary(கனடா) இல் honours உடன் பட்டம் பெற்றார். அவரின் வாழ்நாளில் எல்லா வயதினரையும் கருணையுடன் வழிநடத்தி, ஆலோசனை கொடுத்து, ஆறுதல் படுத்தினார்.
கனடாவில் விக்ரோறியா, B.C க்குச் செல்வதற்கு முன்பு அவர் பல ஆண்டுகளாக Malvern கிறீஸ்தவ தமிழ் சபையின் போதகராக இருந்தார்.
நிதிக் கட்டுப்பாட்டாளராக Watoto Canada விலும், தலைமை கணக்காளராக B.C.புற்றுநோய் நிறுவனம்(Victoria, கனடா) விலும் கடமையாற்றினார். ஒரு திறமையான சொற்பொழிவாளரான அவர் அநேகருக்கு வேதத்தை கற்றுகொடுத்து கர்த்தருக்குள் வழி நடத்தினார், மற்றும் தமிழ் இணைய நற்செய்தி வானொலி நிலையமான Waves of Power மூலமும் மேன்பட்ட பிரசங்கங்களை வழங்கினார்.
Rev.பத்மா தமது அன்புக்குரியவர்கள், நண்பர்கள் மற்றும் ஆண்டவருக்கு அவர் செய்த உண்மையுள்ள சேவை மற்றும் நற்செய்தி மீதான ஆர்வம், அவரது அன்பான ஆளுமை, அக்கறையுள்ள இருதயம் மற்றும் பிரகாசமான புன்னகை ஆகியவற்றால் அவர் பல ஆண்டுகள் ஊழியம் செய்தவர்களால் அன்பாக நினைவுகூரப்படுவார். அவருடைய வாழ்க்கைக்காக நாம் ஆண்டவரை மகிமைப்படுத்துகிறோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலை கனடா Victoria, British Columbia(B.C.) இல் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும்.
உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்” என்று ஆண்டவராகிய இயேசு கிறீஸ்து கூறியுள்ளார். (யோவான் 14:1-3)
நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரி!
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rev. Mrs. Pathma Sivananthan, CA/BRE, born in Singapore and resided in Achuveli; Sri Lanka; Toronto, Ontario; and Victoria, British Columbia (B.C.), Canada, peacefully entered into glory to be with her Lord and Saviour Jesus Christ on June 24, 2021.
Beloved and devoted wife of Mr. Siva Sivananthan, B.Sc. (Financial Advisor, Sun Life, Canada).
Daughter of late Mr. Rajakarier and late Mrs. Annapuranam (Achuveli, Sri Lanka).
Sister of late Punitha, B.A.- Kumar (Canada), Dr. Nagulendran- Sylvia (Singapore), and Sachi, Retired Principal- Shamala (Singapore).
Loving mother of Prakash (B.C. Assessment Authority, Canada).
Dear mother-in-law of Panmoli (Dir., Island Health B.C, Canada).
Cherished grandmother of Kitana (Canada), Selena (Canada), and Treana (Canada).
Sister-in-law of late Maheswary- Subramaniam (Sri Lanka), late Sivathasan (Electrical Engineer, Ceylon Electricity Board, Sri Lanka) - Chandra (Canada), late Kamalambikai-late Yogendran, Dr. Manonmani - late Sivathondan (Sri Lanka), Dr. Logeswary - Kumarasamy (New Zealand), and Vimaladevi - late Jayadevan (Australia).
Pathma was Chief Accountant for Jafferjee Brothers (Sri Lanka) and Finance Controller for Radicals Ltd. (Toronto, Canada).
A devoted scholar, Pathma graduated with honours at Master’s College and Seminary (Canada). She gently shepherded, counselled, and comforted many people of all ages during her life.
She was a Pastor at Malvern Christian Tamil Assembly for several years before her move to Victoria, Canada. She was Finance Controller for Watoto Canada and Chief Accountant for B.C. Cancer Agency (Victoria, Canada). A gifted orator, she led Bible Studies and delivered uplifting sermons through Waves of Power, a Tamil Internet Gospel radio station.
Rev. Pathma will be fondly remembered by her loved ones, friends, and those she ministered to over the years, for her faithful service to The Lord and passion for the Gospel, her warm personality, caring heart, and bright smile. We give God glory for her life and legacy.
Well done, good and faithful servant!
A private funeral will take place on Tuesday, June 29, 2021. A service to celebrate Rev. Pathma’s life will be held at a later date.
“Let not your hearts be troubled; you believe in God; believe also in Me. In My Father’s House are many mansions; if it were not so I would have told you. I go to prepare a place for you. And if I go and prepare a place for you, I will come again and receive you unto myself; that where I am, there you may be also.” (John 14:1-3)
This notice is provided for all family and friends.
Siva Sivananthan - Husband
Email : sivasivananthan@gmail.com
தொடர்புகளுக்கு
- Contact Request Details
So sorry to hear the sad news about Pathma, We extend our Prayers to her family