Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 06 SEP 1935
மறைவு 04 NOV 2023
அமரர் பசுபதிப்பிள்ளை நேசம்மா
வயது 88
அமரர் பசுபதிப்பிள்ளை நேசம்மா 1935 - 2023 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

திதி:23/10/2024

யாழ். புங்குடுதீவு குறிகட்டுவான் 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பசுபதிப்பிள்ளை நேசம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!

எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!

அகவை ஒன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!

அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!

 தாய்க்கு வரைவிலக்கணமே நீதானம்மா!
எங்கள் மீது அன்பு மழை பொழிந்து
பாசமாய் வளர்த்தெடுத்தாயே!
நீங்கள் மண்ணுலகை பிரிந்து
பன்னிரு மாதங்கள் சென்றதம்மா!

என்ன நடந்தது ஏது நடந்தது
என்று கணக்கிட்ட நாட்கள்
அதற்குள் ஆண்டு ஒன்று ஆகி விட்டதே!
நீங்கள் மறைந்து ஓராண்டு ஓடி மறைந்தாலும்
உங்கள் ஒளிமுகத்தை முன் நிறுத்தி என்றும்
உங்கள் மீளா நினைவுகளுடன் வாழ்கின்றோம் அம்மா!

அன்று எம்முடன் வாழ்ந்து மறைந்தீர்கள்
இன்று எம்முடன் மறைந்து வாழ்கின்றீர்கள்!
பிறப்பு, இறப்பு இணைந்தது எனினும்
இழப்பினை நெஞ்சம் ஏற்பதில்லையம்மா!
இந்த உடலும் உயிரும் உங்களது என்றாலும்
கண்ணீரும் கவலைகளும் எங்களது ஆகிற்றே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 10 Nov, 2023