ஜேர்மனி München ஐ பிறப்பிடமாகவும், Krefeld ஐ வதிவிடமாகவும் கொண்ட பாருஜா காண்டீபன் அவர்களின் 31 ம் நாள் நினைவு மலர்.
எங்கள் அருமை மகளின் இழப்பில் துயருற்றிருந்த வேளை நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், வாட்சப், வைபர், பேஸ்புக் சமூகவலைத்தளங்கள் மூலமாகவும் ஆறுதல் வார்த்தைகளையும் கூறி அனுதாபங்களை தெரிவித்தவர்களுக்கும், மலர்ச்செண்டு, மலர்வளையத்துடனும் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தும் இறுதிக்கிரிகையில் கலந்து கொண்டு பக்கபலமாக உதவிகள் செய்தவர்களுக்கும், ஆழாத்துயரில் நாமிருந்தபோது அன்ன ஆகாரம் அளித்தவர்களுக்கும், நேரடி காட்சிக்கு உதவிய பெருமகனுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் இன்று வரை எமக்கு சகலவிதமான உதவிகளை அளித்த அன்பு நெஞ்சங்களுக்கும் எம்முடன் கரம் கோர்த்த லங்காசிறி ஊடக உறவுகளுக்கும் எமது குடும்பம் சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.