யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கந்தமூர்த்தி அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அம்மா என்றால் அன்பு
உங்களைப் போல அன்பு செய்ய
யாருமில்லை இவ்விலகில்...
அன்பு ஆதரவு, பாசம், நேசம், அரவணைப்பு
எனத் தியாக தீபமாய் ஒளிர்ந்த
எங்கள் அம்மாவே இனி எங்கே
உங்களைத் தேடுவோம்...
கரம் பிடித்து பள்ளி சென்றோம்
கானம் கேட்டே களிப்படைந்தோம்
படிப்படியாய் நாம் உயர
நற்பாதைதனை அமைத்தீர்களே...
பட்டங்கள் நாம் பெற்றிட
பாலமாய் உழைத்தீர்கள்
எங்களை விட்டு விட்டுச் சென்றீர்களே
அம்மா வேதனையில் இதயம் வலிக்கிறதே...
கருவில் உயிரைத் தந்தீர்கள்
கண்ணாய் காத்து வந்தீர்கள்
உருவம் வளர உருகினீர்கள்
உணவை ஊட்டி வளர்த்தீர்கள்
கண்முன்னே நீங்கள்
காணாமல் போய் விடினும்
எம்மிதயத்தில் உங்கள் சிரித்த முகம்
என்றென்றும் உயிர் வாழும்
உயிர் தந்த உறவே
காணிக்கை கேட்காத தெய்வமே
கண்ணீர்ப் பூக்களால் அர்ச்சிக்கின்றோம் அம்மா...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Rest in peace