யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பராசக்தி கதிர்காமு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதலும்.
மாதம் ஒன்றல்ல ஓராயிரம்
ஆண்டுகள் சென்றாலும்!
எம் குலத்தின் விருட்சமாகி
அன்பிற்கு இலக்கணமாய் நின்ற
உங்கள் நினைவு எம்மை விட்டு நீங்காது...
வளமான வாழ்வு தந்து
வாழ்விற்கு ஒளி தந்து
தேசம் புகழும் நிலை பெற்று
பாசத்துடன் எமை வளர்த்து
அழியாப் பிறப்பெடுக்கும் ஆவலுடன்
ஆன்மா தாங்கிய சரீரம் நீங்கி
ஆண்டவன் அடியில் அமரத்துவம் கொண்ட
எங்கள் அன்புத்தாயின் பாதம் பற்றி
உணர்வினால் பூஜித்து
உயிரினால் அலங்கரித்து
உதிரத்தால் தீபம் ஏற்றி
எம் கண்ணீரால் அர்ச்சனை செய்து
அம்மாவின் நினைவுகளைச் சுமந்துவரும்
தீபமலரை அன்னையின் பாதக்கமலங்களுக்கு
சமர்ப்பணம் செய்கின்றோம்
ஏற்றருள்வீர் எம்மினிய தாயே!
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
அன்னாரின் அந்தியேட்டி கிரியை 01-02-2020 சனிக்கிழமை அன்று Vordermattweg 20, 4322 Mumpf, Switzerland. எனும் முகவரியில் நடைபெறும்.