Clicky

45ம் நாள் வீட்டு கிரியையும், அந்தியேட்டி நிகழ்வும்
தோற்றம் 12 JUN 1939
மறைவு 02 JUL 2026
திருமதி பராசக்தி நிர்மலராஜா
ஓய்வு பெற்ற தலைமை செவிலியர் மானிப்பாய் ஞாபகார்த்த மருத்துவமனை, யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலை, லேடி ரிச்வே வைத்தியாசாலை கொழும்பு, தங்காலை ஆதார வைத்தியசாலை
வயது 87
திருமதி பராசக்தி நிர்மலராஜா 1939 - 2026 ஏழாலை மேற்கு, Sri Lanka Sri Lanka
45ம் நாள் வீட்டு கிரியையும், அந்தியேட்டி நிகழ்வும்

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அம்பாந்தோட்டை தங்காலை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பராசக்தி நிர்மலராஜா அவர்களின் 45ம் நாள் வீட்டு கிரியையும், அந்தியேட்டி நிகழ்வும்.

பாசமும் பரிவும் தந்த எங்கள்
குடும்பத்தின் குத்துவிளக்கே
நீங்கள் எங்கே சென்றீர்கள் அம்மா! 

புயலுக்கு மத்தியில் காற்று வீசுவது
போல் 45 நாள் கடந்து விட்டன
பலமான காற்றைப் போல உன்
மரணமும் எங்கள் குடும்பத்தை
துண்டு துண்டாக உடைத்தது
ஆனால் நம் உள்ளங்களில்
இருக்கும் உங்கள் இருப்பை
முன்னோக்கி செல்வதற்கு
பலத்தையும் தைரியத்தையும்
எங்களுக்கு அளித்தது எத்தனை
நாட்கள் மாதங்கள் அல்லது வருடங்கள்
கடந்து இருந்தாலும் நீங்கள் இல்லாமல்
எங்கள் வாழ்க்கை எப்போதும்
முழுமையானதாக இருக்காது  

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 45 வது நாள் மற்றும் அந்தியட்டி கிரிகைகள் 15-08-2026 சனிக்கிழமை அன்று  கொழும்பில் நடைபெறும். சிவபூமி வயோதிபர் இல்ல வாசிகளுக்கு எமது தாயாரின் நினைவாக மதியபோசனமும் வழங்கப்படுகிறது..

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.