யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 15 ஐ வதிவிடமாகவும் கொண்ட பராசக்தி முருகேசபிள்ளை அவர்களின் அந்தியேட்டி ஆத்ம சாந்திப் பிரார்த்தனை அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை எதிர்வரும் 16-04-2021 வெள்ளிக்கிழமை காலை 05:00 மணியளவில் இல. 40, கோவில் வீதி, முகத்துவாரம் அந்தியேட்டி மடத்திலும் வீட்டுக் கிரியை 18-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து காலை 11:30 மணிமுதல் இல. 146, ஸ்ரீ கதிரேசன் வீதி, கொழும்பு - 13ல் அமைந்துள்ள வீரமைலன் மண்டபத்தில் நடைபெறும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், மதிய போசனத்திலும் கலந்துகொண்டு அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
இறுதிக்கிரியை நிகழ்வின் பொழுது தேவாரம், திருவாசகம், ஓதியோருக்கும், நினைவு மலரினை அச்சிட்டுத்தந்த அச்சகத்தினருக்கும், உணவுகள் தந்து உதவியோருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
My love to you Thamaraichelvi & Arulmoli