யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 15 ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பராசக்தி முருகேசபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மாவென அழைத்திட ஆசைபெருகிடுமே
அம்மா இன்று இல்லையென்ற
கவலை இன்னும் தான் தீரவில்லை
உயிர் தந்து உருவம் தந்து
வளமான வாழ்வுக்கு ஒளிதந்து
கல்வியுடன் நற்பண்புகளை
ஊட்டி வளர்த்த அன்னையே
கொடிமரம் சாய்ந்தது போல் எமை விட்டு
சடுதியாய் மறைந்து போனது
கொடுமையம்மா
ஆண்டு ஒன்று ஓடி மறைந்திட்டாலும்
மறப்போமா எங்கள் ஆருயுயிர் அன்னையை
மீண்டும் பிறந்து வந்துவிடு எங்கள் உயிர்தாயே
காத்திருப்போம் நாம் வாழும் காலமெல்லாம்
அன்னாரின் 01ம் ஆண்டு வீட்டுக் கிரியைகள் 08-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் எமது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து மு.ப 11.30 மணியளவில் இல. 146, ஸ்ரீ கதிரேசன் வீதி, கொழும்பு-13 எனும் முகவரியில் அமைந்துள்ள வீரமைலன் மண்டபத்தில் நடைபெறும். 01ம் ஆண்டு ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், மதிய போசனத்திலும் கலந்துகொண்டு அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:-
இல. 538,12D, 2/1,
அளுத்மாவத்தை வீதி,
கொழும்பு-15.
My love to you Thamaraichelvi & Arulmoli