Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 23 FEB 1926
இறப்பு 01 SEP 2024
திருமதி பராசக்தி கோபாலபிள்ளை
வயது 98
திருமதி பராசக்தி கோபாலபிள்ளை 1926 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். மானிப்பாய் வீதி சிவன் கோவில் மேற்கு வீதியைப் பிறப்பிடமாகவும், கொட்டடி வில்லூன்றி பிள்ளையார் கோவிலடியை வாழ்விடமாகவும், பிரான்ஸ் Colombes ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பராசக்தி கோபாலபிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டி வீட்டு சமயாசாராகிரியைகள் 01-10-2024.செவ்வாய் கிழமை அன்று அவரது மகனார் இல்லத்தில்நடைபெற்று. அன்று மதியம் பகல் 11மணி தொடக்கம் 04:00 மணிவரை Saint-Marc Des BRUYÈRES16 Rue du Bourbonnais92600 Asnières -sur-seine.எனும் முகவரியில் (SNCF... BOIS COLOMBES).Gare de Bois Colombes Bus:178Direction :La Défense Arrêt :Balzac..வருகை தந்து. அன்னாரின் ஆத்மா சாந்திபிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்... நன்றிகள் நன்றிகள். 

இங்ஙனம், குடும்பத்தினர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
Tribute 10 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.