1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பராசக்தி கோபாலபிள்ளை
வயது 98
Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். மானிப்பாய் வீதி சிவன் கோவில் மேற்கு வீதியைப் பிறப்பிடமாகவும், கொட்டடி வில்லூன்றி பிள்ளையார் கோவிலடியை வாழ்விடமாகவும், பிரான்ஸ் Colombes ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த பராசக்தி கோபாலபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 22-08-2025
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை ஒன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
கோபாலபிள்ளை ராமச்சந்திரன்(சிவன்) குடும்பத்தினர்