இலங்கை நாட்டின் யாழ் மாவட்டம் மல்லாகத்தினை பிறப்பிடமாகவும், நோர்வே நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சந்திரசேகரன் பராசக்தி அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். திருமதி பராசத்தி அம்மா குடும்பத்தினர்கள் புலம்பெயர்ந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தாய்த்திரு நாட்டின் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்டு இருந்தார்கள் என்பது உண்மை. கடந்த காலத்தில் நடைபெற்ற போர்ச்சூழல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார உதவிகளோடு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உதவி செய்வதிலும் அக்கறையாக இருந்தார்கள். சென்ற வருடம் இதே நாள் () முல்லைத்தீவு மாவட்டம் சிராட்டிக்குளம் எனும் கிராமத்தில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களோடு அன்னதானமும் வழங்கப்பட்டது. இவற்றை எல்லாம் ஒழுங்கு படுத்தி அன்னாரின் மருமகன் திரு நா. கண்ணன் என்பவர் செய்து வருகிறார். அவருக்கும் நாம் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளோம். சென்ற வருடம் உதவி செய்த பராசக்தி அம்மா இன்று எம்முடன் இல்லை என்பது மிகவும் மன வேதனை அளிக்கின்றது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!