Clicky

பிறப்பு 20 APR 1961
இறப்பு 06 NOV 2025
திருமதி பரராஜசிங்கம் குணபூசணி
வயது 64
திருமதி பரராஜசிங்கம் குணபூசணி 1961 - 2025 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
"எங்கள் குணக் குன்று" கன்னம் குழிந்திட கண்கள் சிரித்திடும் சின்னஞ் சிறியதோர் குஞ்சுனைக் கொஞ்சினோம்... சின்னவளாய் எங்கள் சிறகுள் அணைந்தனை... மார்பிலும் தோளிலும் சுமந்து களித்தனம்... பின்னர் வளர்ந்தனை பீடு நடையுடன் பன்னக் கலையிலே பண்டிதை ஆயினை... உன்னைத் தொடர்ந்ததோர் ஐவர் தவழ்ந்தனர் அத்தனை பேரையும் தாங்கிச் சுமந்தனை... மன்னவன் 'சிங்கனை' மனத்தில் வரித்தனை மக்கள் இருவரை பெற்று மகிழ்ந்தனை... உன்னவன் சின்னாளில் உலகைப் பிரிந்தனன்... சின்னவளாயினும் சிறகை விரித்தனை... சற்றும் சளைத்திலை - சந்ததி மிளிர்த்தியே வெற்றிப் பெருமிதம் கொண்டு நிமிர்ந்தனை... நெற்றிப் பொட்டிலே நேர்படச் சுட்டிய ஒற்றைக் குரலே! ஓய்ந்தனை தங்கையே... கன்னல் மொழியும் கருமை அழகும் மின்னல் விரித்திடும் விசாலச் சிரிப்பும் உன்னில் இருந்து உதிக்கும் ஒளியும் தன்னம் தனியாய் தடம்பதி வாழ்வும் மன்னும் நினைவாய் மனத்திடை நிலைக்கும்... பென்னம் பெரியளாய் பொலிந்து விரிந்தனை.... போற்றுகின்றதோர் குன்றென நின்றனை... உன்னைச் சுமந்தோம் உளத்திடை மீண்டும்...
Write Tribute