"குணம்", அவள் மண்னின் மங்கையாக இறுதிவரை வாழ்ந்தவள், இளவயதில் தனது துணையை இழந்த பின்பும், நாடு எதிர்கொண்டிதிருந்த அசாதாண நிலையிலும் தனி ஒருத்தியாக தனது பிள்ளைகளி எதிர் கால வாழ்வின் வளத்திற்கான கல்வியை நல்க தன்னை மெழுகுவர்த்தியாக உருக்கி வாழ்ந்தவள் - இடையிடையே வந்து வந்து முயற்சி செய்த காலனை வெறும்கையோடு வீட்டுக்கு அனுப்பியவள்... இவ்வளவு போராட்ட வாழ்விலும் ,சுயமரியாதை கேள்வியாகும்போது, எவருடனும் எந்த சமரசத்திற்கும் இணங்காதவள்,தீவகத்தின் பெரும் அடையாளமான பனம் பொருட்களின் பயிற்சிப்பட்டறைகளில் பயின்று,பயிற்றுவித்தவள், விருந்தோம்பலில் - அவளுக்கு நிகர் அவள்தான்.... எனினும், அவளின்இஷ்ட தெய்வமான ஐயப்ப்பன் -- சந்நிதியில் சந்திக்கக் காத்திருக்காமல்,எந்த உபாதைகளும் இன்றி ஒற்றை நாளில் தன்னகத்தே ஆட்கொண்டு விட்டான்.... அவளின் பேரின்ப பெருவாழ்வுக்கு நாங்களும் பிரார்த்திப்போம் "மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்"