இருபது வருடங்கள் ஒன்றாக பயணித்த எனது அப்பா(மாமா) என்னை விட்டு பிரிந்து இறைவனடி சேர்ந்து விட்டார். சிவசுப்பிரமணியம் பரராஜசிங்கம் எனது மனைவியின் தகப்பன். நானும் அவரை அப்பா என்றுதான் கூப்பிடுவேன். இத்தனை வருடத்தில் ஒரு முறை கூட என்னுடன் சண்டைபிடித்திருக்க மாட்டார்.ஒரு சிரிப்புடன் தனது காலத்தை கழித்தார்.நான் வேண்டுமென்று அடிக்கடி தனகுவேன் அவர் உங்களுக்கு வேறு வேலையில்லை எனச் சிரித்து விட்டு செல்வார். ஒவ்வொரு நாளும் கடைக்குப்போய் பழங்கள் வாங்கி வெட்டி எனக்கும் பிள்ளைகளுக்கும் தருவருவதுதான் இவரின்அன்றாடவேலை. அவர் லண்டன் வந்தபோது பேப்பர் போடபெடியன்வரவில்லை என்றால் விடிய எழும்பி பேப்பர் போடுவார்.கோயிலுக்கு வீபூதி கட்டி கொடுப்பார் வீட்டை குப்பையாக்கிறார் என பேசுவேன் மூன்று பிள்ளைகளையும் வளர்த்துவிட்டவர் இன்று இல்லை .அவரைப் போய் பார்க்க இயலாத சூழ்நிலையில் இருக்கிறோம். மூன்று வயோதிபர் களை ஒரே வீட்டில் வைத்துப்பார்த்தேன்.அம்மா(மாமி); அப்பா(மாமா) எனது அப்பா. அடிக்கடி வானொலியில் முதியோர் இல்லத்தைப்பற்றி கதைப்பார்கள். நான்மூன்று பேரையும் வைத்துப்பார்ப்பதை நினைத்து பெருமைப்படுவேன். அம்மா முதல் இறந்தார்.அவரின் பிரிவு எனது மகளின் தமிழைப் பாதித்தது.மகள் சொல்லுவா அம்மம்மா எனக்குச்சொல்லித்தந்து தானும் படிக்கிறா என. நீங்கள போகும்போது நீண்ட நாட்களாக தொடர்பு இல்லாத தாய்நாட்டை என்னுடன் இனைத்து விட்டு சென்றீர்கள்.ஒரு வீட்டிற்கு அம்மம்மா எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் இல்லாத போது தான் உணர்ந்தேன். எனது அப்பா பற்றி முன்பு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளேன்.நாலுபேருக்கு நல்லது செய்தால் நல்லாயிருக்கலாமெனக்கூறுவார். அவரின் கனவுகளை நிறைவேற்றுவேன். ஒரு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தோம்.ஒவ்வொருவராய் பறந்து;பறந்து சென்றுவிட்டீர்கள்.. இப்போது தனிமரமாய் நிற்கின்றோம்.நேற்றுக்கூட மகள் சொன்னா அம்மப்பாவும்; அப்பப்பாவும் கதைத்துக்கொண்டிருப்பார்கள் என மனித வாழ்க்கை பிறப்பும்; இறப்பும் இயல்பு. 13/04/20 மாமாவை தகனம் செய்ய இருக்கிறோம்.பத்துபேர் மட்டுமே வரலாம் என்ற சட்டத்திற்கு அமைய உங்கள் உடல் தீக்கிரையாmக உள்ளது. மூவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். போய் வாருங்கள் அன்புடன் சத்தி