யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் சிவசுப்பிரமணியம் அவர்கள் 30-03-2020 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு புதல்வரும், நெடுந்தீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தங்கம்மா(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் பாசமிகு கணவரும்,
பாஸ்கரன்(தயா- லண்டன்), புஸ்பகரன்(ஜெயா- இத்தாலி), சோதீஸ்வரி(ஜெயந்தி- லண்டன்), சிவனேஸ்வரி(சாந்தி- லண்டன்), காலஞ்சென்ற திலகேஸ்வரி(வசந்தி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தர்மசூரியலிங்கம், சர்வலோகலட்சுமி, வீரகுலசிங்கம், விசாலாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சதாம்பிகை(சசி- லண்டன்), பொன்மலர்(மாலா- இத்தாலி), சண்முகலிங்கம்(சக்தி- லண்டன்), பிறேமகுமார்(பிறேம்- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திவாகரன், ஜாபேஷ், மிதுஷா, சீதுஷா, சுலக்ஷன், அனுஷன், தனுஜா, வினுஜா, அபிஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
நிகழ்காலச் சூழ்நிலை காரணமாக குடும்ப உறவுகள் மட்டும் பார்வைக்கும், இறுதிக் கிரிகைகளிற்கும் அனுமதிக்கப்படுவதால் உங்கள் அனுதாபங்களை தெரிவிக்க பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.