யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் பரமேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
இன்றோடு 31 நாட்கள்
அவணியிலே நீங்கள் இல்லை
நினைக்கையில் வியக்கின்றேன்
நிஜமாய் நான் வாழ்ந்தேனா?
நினைவுகள் வருகையிலே
நிலைகுலைந்து போகின்றோம்
காணும் காட்சிகளில்
கண்முன்னே நிற்கின்றீர்!
அன்பாய் அம்மா என்று
அழைத்திட யாருண்டு?
வேதனையை சொல்லிவிட
வார்த்தைகள் இல்லையம்மா
மீண்டும் நீ வாருமம்மா
வாழ்ந்திட
இவ்வுலகில்
நீ வரும் காலம்
வரும்
என எண்ணி வாழ்கின்றோம்...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி நிகழ்வு July 9th, 2022 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை Royal King Banquet Hall, 181 Rexdale Blvd, Etobicoke, ON M9W 1R2, Canada எனும் முகவரியில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து ந.ப 12:00 மணிமுதல் பி.ப 03:30 மணிவரை மதிய போசனம் நடைபெறும்.