

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Richmond Hill ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி கிருஷ்ணபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் இதயமென்னும் கோயிலில்
தெய்வமாய் நிறைந்திட்ட
அன்னையே! நம்பமுடியவில்லை
ஓராண்டு கடந்ததை...
ஆயிரம் உறவுகள் இருந்து
என்ன உன்னைப்போல்
அன்புகாட்ட ஆறுதல் கூறிட
யாரும் இல்லை அம்மா...
அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த அன்னையே
என்றும் அனையாத சுடராய்
எல்லோர் மனதிலும்
வாழ்ந்துகொண்டிருக்கிறீர் அம்மா!
பார்க்கும் இடமெல்லாம் நீங்கள் நிற்பதுபோல்
நீங்கள் எம்முடன் வாழ்ந்த காலங்கள்
எம்முள்ளே நித்தமும் அலைமோதிய
வண்ணம் உள்ளது அம்மா!!!
புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது
ஆனாலும் அது உண்மை
இல்லை என்று நினைத்தபின்
எம் மனம் கலங்குகிறது!
நீங்கள் மறைந்து பன்னிரு திங்கள் ஆனால் என்ன?
எம்மைவிட்டு நினைவுகள்
என்றுமே மறந்து விடப்போவதில்லை!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
Jala, Khavin and I think of you, but we know that you are in a better place. We Love you lots. RIP