யாழ்ப்பாணம் பிறவுண் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமேஸ்வரி பத்மநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
கீதாசாரம்
எது நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ
அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய்?
அதை நீ இழப்பதற்கு
எதை நீ படைத்திருக்கிறாய்?
அது வீணாவதற்கு
எதை நீ எடுத்துக் கொண்டாயோ
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது
எதை கொடுத்தாயோ
அது இங்கேயே கொடுக்கப்பட்டது
எது இன்று உன்னுடையதோ
எது நாளை
மற்றொருவருடைதாகிறது
மற்றொருநாள்
அது வேறொருவருடையதாகும்.
“இதுவே உலக நியதியும்
அனது படைப்பின்
சாராம் சமுமாகும்”
- பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் சபிண்டீகரணக் கிரியைகள் வைகாசி 2ம் நாள், 15-05-2024 புதன்கிழமை மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.185/6, பிறவுண் வீதி,
யாழ்ப்பாணம்.
Heartfelt condolences to Surendran, Sivendran, Kumaran and Mayourathy on your loss. May Akka's aathma rest in eternal peace. Om Shanthi.