 
                    பள்ளிக் காலத்தில் கைகோர்த்து துள்ளித் திரிந்தவனே பாசறை வாழ்விலே பல பேருக்குள் புரட்சியை விதைத்தவனே சொல்லி சொல்லி இனிக்கின்ற ஞாபகங்கள் தந்தவனே சொல்லாமல் பறந்ததேனோ--- சோகத்துள் எமை புதைத்ததேனோ??? கட்டிய துணையவள் காரிருளாக தோளில் ஊஞ்சலாடிய குஞ்சுகள் கூடு இன்றி வாட பெத்து வளர்த்த பெற்றவர்--- கண்ணீர் தீவில் மூழ்க உற்று பார்க்கிறோம் மதியே -- ஒரு முறை திறப்பாயா மூடிய விழியை??? வாழ்ந்து முடித்து போயிருந்தால் வாழ்த்துக்களால் வடம் இழுத்து வழியனுப்பி வைத்திருப்போம் வாழும் வயதில் பறந்து போனாயே எதை எழுதி எம்மை தைப்போம்??? ஞாபகங்கள் ஒவ்வொன்றும் மனதேறி விளையாட பூமுகமே--- உன் அன்பில் புன்னகைகள் கவிபாட யார் முகத்தை பார்த்து ஆறுதல் கொள்வோம் ஆறுமுகம் போல் அழகு முகம் கண் மூடி கொண்டதே--- இனி பார்க்க யாரிடம் செல்வோம்??? ஒவ்வொரு உறவிலும் விதையாய் விழுந்து முளைத்தது-- மரணம் உன்னை சீக்கிரம் அழைக்கும் என்றா ஒவ்வொரு உணர்விலும் உயிரில் கொதிப்பது அன்பு மட்டும் தான் இவ்வுலகில் மேன்மை கொண்டது என்றா உயிர் உருகி உருகி மெழுகாய் கரையுது தோழா இந்த உலகில் நாம் வாழும் வரை நினைவில் விழிப்பாய் சீலா??? மரணம் தொடும் வரை நீ வாழ்ந்த வாழ்க்கை அழகு மனையும் வாழ்வும் வளரும் முன் நீ போனதே பெரிய எரிவு துணையும் தூய உயிர் பூக்களும்--- நீயின்றி கருகி கிடக்கையில்--- தாங்க முடியவில்லை தவிப்பு உருகி கரைந்து தொழுது நிற்கிறோம் இறையோடு சேர்ந்து இளைப்பாறி பிறந்து வா புதிய பிறப்பு??? ???ஓம் சாந்தி ??? nanthan thamotharampillai
 
     
                     
         
                    
Our deepest condolences Rani aunty.Dr Anita family and rani.from Annaicoddai.our contact number 0772762885