நண்பனே விசை,1975ம் ஆண்டின் முற்பகுதியில் உனது 20 வது வயதில் இருந்து தொடங்கியது எமது நட்பு - நல்லூரடி, சிறாம்பியடி, சுன்னாகம், கண்டி... இவற்றில் படிப்பு, பயிற்சி, பாசறை என நீண்டு அதன் பின்னர் நடுநிசி வரை அலப்பறைகள் என ஆங்காங்கே கூடிவாழ்ந்தோம் , அதன்பின்னர் ஜேர்மனியின் குமர்ஸ்பாக், நொய்ஸ், டுசில்டோர்வ் நகர்களிலும் ஒரு மரத்துப் பறவைகளாகவும் கூடு கட்டி வாழ்ந்தோம்... நீ எப்பொழுதும் அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுப்பவனாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறாய். "மழைக்கால் இருட்டு என்றாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது" என்ற பழமொழிக்கொப்ப நீ காலம் தாழ்ந்து கலவரமாய் கண்ணயரச் சென்றாலும் காலையில் கடுகி எழுந்து கருமமாற்றக்கூடியவன்... உனது நற்பண்புகள் அனைத்தும் குடத்துள் அமிழ்ந்த விளக்காகிப்போயின. இறுதி நாட்கள் மட்டும்தான் உனக்கு உபாதையாகிப்போயின... ஆனால் நீ அடுத்தவர்க்கு உபாதையாகிப் போகாமல் உனது அயலவன் "நல்லூரான்" வேலோடு மயில் அமர்ந்து உன்னை ஆட்கொண்டு விட்டான்... நண்பனே ! அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல, நீ கூடி வாழ்ந்து அடுத்தவருக்கு கோடி நன்மைகளை பெற்றுக்கொடுத்தவன் - அது உனது ஆன்ம சங்கல்பத்துக்கான அச்சாரம். வாழ்வியலில் நிதந்தரப் பிரிவு நிதர்சனமானது , ஆனால் வரிசையில் நீ முந்திக்கொண்டாய் நாங்கள் பின்னே நிற்கின்றோம்... விழிநீர் சுரந்த கண்களுடன் எங்களின் வசந்த கால நினைவுகளை நெஞ்சில் சுமந்து - பெருந்தொற்றின் ஊழித்தாண்டவத்தால் உனது இறுதிக் கடன்களில் சமூகமளிக்க முடியாத கையறு நிலையாக்கிப்போயினோம். சென்றுவா நண்பனே சந்திப்போம் ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி !!! நண்பர்களுடன், பரத்தான். நொய்ஸ்,நோர்வே
Deepest sympathies and heartfelt condolences to Vije and family. May his soul rest in peace. I am sorry that I have missed the funeral.