Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 18 SEP 1946
ஆண்டவன் அடியில் 14 NOV 2025
அமரர் பரமசாமி கிருஸ்ணபவானி (தவம்)
வயது 79
அமரர் பரமசாமி கிருஸ்ணபவானி 1946 - 2025 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 26 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி:03/11/2026
 
யாழ். மானிப்பாய் பொன்னம்பலம் வீதியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை மணிக்கூட்டு வீதி பெருமாள் கோவிலடியை வசிப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பரமசாமி கிருஸ்ணபவானி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா!
ஆண்டொன்று ஆனதம்மா இன்று!
ஈன்றெம்மைப் பெற்றவளே!
உனை இழந்து! உமைப் பிரிந்தோம்!
பல நாள் ஊணுறக்கம் மறந்தோம்!

அழுதழுது தேடுதம்மா
எம் விழிகள் உங்களைக் காண்பதற்கு
ஒருமுறை வருவீர்களோ!

கண்மணிகளாய் எமை ஆளாக்கிவிட்டு
காற்றோடு போய்விட்டீர்களே!
கண்களில் நிறைந்த நீருடனே- நாம்
கலங்குகின்றோம் அம்மா அம்மாவென்று

பாசத்தோடும் பண்போடும் எமை
பாதுகாத்த எம் தாயே!
விண்ணிலே இருந்தாலும் எம் சந்ததிக்கு
ஒளி விளக்காய் ஒளி தந்து
வழி நடத்துங்கள் அம்மா!

நினைத்து பார்க்கு முன்னே நினைக்காமல் போனதென்ன
நிஜம்தானா என்று நினைக்கின்றோம் தினமும்
திக்கற்று தவிக்கின்றோம் திரும்பி வரமாட்டிரே

எங்கள் இதயதுடிப்பில் அன்பு கொண்ட உம் முகம்
அருகினில் இருப்பது போல்  உணர்கின்றோம்

தாயாய் உதித்த எங்கள் பாசவிளக்கு ....
அள்ளி எடுத்து அரவணைத்த அன்புத் தாய்
பார்விட்டு அகன்று ஓராண்டு ஓடியது
கார்மேக கூட்டமாய் கலையாது உங்கள் நினைவுகள்
காலம் கடந்தும் வாழும் உங்கள் ஞாபகங்களுடன்....
அன்பு குடும்பத்தினர்  

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Sorry to here the sad news. Our deepest condolences for You and your family in this difficult time. From Mr. Appiah Tharmarajah and Sulojana Tharmarajah Family.

Sulojana Tharmarajah
United States 11 months ago
F
L
O
W
E
R

Flower Sent

We will miss you. Though we might not have known you for a long time, you have a special place in all of our hearts. Lots of love, Ganeshan family

RIPBook Florist
United Kingdom 11 months ago

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 14 Nov, 2025
நன்றி நவிலல் Thu, 11 Dec, 2025