யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், இளவாலை முள்ளானை, இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பரமானந்தன் இராஜேஸ்வரி அவர்களின் நன்றி நவிலல்.
நாட்கள் முப்பத்தொன்று கடந்து ஓடியதே
என் ஈர விழிக் கண்ணீர் மட்டும் ஓயவில்லையே
சிரிப்புட அழகாக வாழ்ந்த உன்னை
ஈசன் இரக்கமில்லாமல் அழைத்துச் சென்றானே!
மாறாத உன் அழகிய முகமும் அன்பான பேச்சும்
எம்மை வாட்டுதே !
நாளும் பொழுதும் நாம் வாடுகின்றோம்
உன் நினைவுகளால் துவண்டு!!
அல்லும் பகலும் அயராது உழைத்து
நல்ல மனையாளாய் அன்புத் தாயாய் வாழ்ந்தாயம்மா!
பிறந்த இடம்சிறக்க புகுந்த இடம் செழிக்க வாழ்ந்தாயம்மா!
எத்துணை இடர்வரினும் அத்தனையும் மறந்து
அன்பாக பேசி ஆறுதலடையச் செய்தீரே!
உள்ளம் உருகுதம்மா உம்பிரிவு தாங்காமல்
எம்மை எல்லாம் பரிதவிக்க விட்டு எங்கே சென்றீர்கள்
உம்மோடு வாழ்ந்த பசுமையான நினைவுகள்
என்றும் எம்மை விட்டகலாதம்மா
எம் விழிகளில் கண்ணீர் தந்தாய்
இறையடி இணைந்தே
இளைப்பாறுவாய்!!!
எங்கள் தாயாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், நேரில் வந்து ஆறுதல் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும் மற்றும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.