யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், இளவாலை முள்ளானை, இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பரமானந்தன் இராஜேஸ்வரி அவர்கள் 20-11-2019 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரமானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
விஜயதரன்(விஜி- பிரான்ஸ்), சுரேஸ்தரன்(சுரேஸ்- பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜெனந்தினி, தரணீதரன்(ஜெனன் -பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவகௌரி(பிரான்ஸ்), மயூரதி(பிரான்ஸ்), பிருந்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி, மகேஸ்வரி, நாகம்மா, கனகரத்தினம், இராசமணி, இராசதுரை, செல்வராணி மற்றும் செல்வமலர்(இலங்கை), நிர்மலாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சறோசினிதேவி, இராசா, கமலாம்பிகை, இராமநாதன், நடராசா, பரமேஸ்வரி(இலங்கை), பரராஜசிங்கம், குணசிங்கம், நமசிவாயம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிவேதா, விதுஷன், நிஷானி, மதுஷா, ஆதவன், ஆரதி, கஜீன், திபிஷா, கவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.