அன்பு மைத்துனனே நாதன், நீ தந்தை வழி உறவினனாய் அவதரித்து தங்கை வழி உறவாக உட்புகுந்து ஒரு மரத்துப் பறவைகளாக கூடி வாழ்த்தோம் .... ஆட்டம் ,பாட்டு, களிப்பு ,கசப்பு என இரண்டு கண்டங்களிலும் கூடி வாழக் கிடைத்தது ...90 களில் நீ கனடாவிற்க்கு பயணப்பட்டாய், குடும்பத் தலைவனாய், உறவினனாய், நண்பனாய் ... வாழ்வின் அனைத்து நிலைகளையும் கடந்து, நீ தகவல் தெரிவிக்காமலேயே உனது நெடும் பயணம் தொடங்கிவிட்டாய் வந்து வழியனுப்ப முடியாத கையறு நிலையில் நான் இருக்கின்றேன், கடந்துபோன பெருந்தொற்றின் உடல் உபாதைகள் ஏனய சூழ்நிலைகள் என்னை தடுக்கின்றன.எம்பெருமான் காலடியில் நீ வாழப்போகும் பெருவாழ்விற்காக நானும் எனது நல்லூர் முருகனை இரந்து நிற்கின்றேன். ஓம் சாந்தி !ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!