Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 AUG 1932
இறப்பு 09 SEP 2021
அமரர் பரமலிங்கம் புஸ்பவதி 1932 - 2021 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்.வண்ணார்பண்ணை, ஆறுகால் மடத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன், திண்ணைவேலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமலிங்கம் புஸ்பவதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் இதயமென்னும் கோயிலில்
 தெய்வமாய் நிறைந்திட்ட அன்னையே!
நம்பமுடியவில்லை ஓராண்டு கடந்ததை..

மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
ஆறாத்துயரில் தவிக்கின்றோம்
ஆயிரம் உறவுகள் இருந்து என்ன
உன்னைப்போல் அன்பு காட்ட
ஆறுதல் கூறிட யாரும் இல்லை அம்மா..

புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது
ஆனாலும் அது உண்மை இல்லை
என்று நினைத்தபின் எம்
மனம் கலங்குகிறது!

ஒடிந்த எங்கள் வீட்டு புஸ்பம்
பூக்காதோ இனி மீண்டும்
 கடந்த உங்கள் நினைவுகளில் எம்
 மனம் தெம்புகிறதே எண்ணி இன்னும்
 தேடி தேடி நீங்கள் அழைத்த குரல்
இன்னும் ஓங்கி ஓங்கி கேட்கிறதே
 எம் காதில் இன்றும்...

ஓராண்டு கழிந்தும் ஒட்டுயிராய்
 நீங்கள் அளித்த அன்பும் அரவணைப்பும்
 ஒவ்வொரு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,
மருமக்கள், பூட்டப்பிள்ளைகள் மனதில் என்றும்
நீங்காது அழியாது என்றும் நிலைக்கும்
 உங்கள் நினைவுகள்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் நாம்

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்