யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், லண்டன், திண்ணைவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட பரமலிங்கம் புஸ்பவதி அவர்கள் 09.09.2021 அன்று சிவபதம் அடைந்தார்.
மலராதோ மீண்டும் எங்கள் புஸ்பம்
மலராதோ மீண்டும் எங்கள் புஸ்பம்
அழைக்காதோ மீண்டும் தொலைபேசியில் எம்மை
கன காலம் சாதித்த சகாப்தங்கள் போதுமென்று
காற்றோடு காற்றாக கலந்திட்டது ஏனோ?
நோய் என்று நீங்கள் ஒருநாளும் இருக்கவில்லை
நோகும்படி ஒரு வார்த்தை யாருக்கும் சொன்னதில்லை
வாய்விட்டு சிரித்து வகைவகையாய் கதை கூறிவிட்டு
பார்விட்டு நீங்கள் பலதூரம் சென்றது ஏனோ?
ஆலமரம் போல நீங்கள் உறுதியாய் வாழ்ந்திருந்து
விழுதுகள் எங்களை நன்கு சீராட்டி வளர்த்து
இறுதிவரை உறுதியாய் வாழ்ந்து காட்டிவிட்டு
இறைவனிடம் விண்ணோக்கி விரைந்து சென்றது ஏனோ?
பவானி எனும் கடைசிமகள் அன்பு நங்கையோடு
பதினேழு வருடங்கள் பவனி வந்தீர்கள் லண்டன் நாட்டில்
ஓர் மகாராணி போல் அவள் வீட்டில் ஆட்சி செய்து
ஓராயிரம் நினைவுகளை விட்டுச் சென்று விட்டீர்கள்
இதயம் எனும் உங்கள் ஈரமான வீட்டின் உள்ளே
அருமைத் தம்பிக்கென அழகான இடம் வைத்தவர் நீங்கள்
அன்ரி அன்ரி என அழைத்து அன்பு காட்டியவர்களை
விம்மி வெடித்துக் கதறியழ விட்டுச் சென்றது ஏனோ?
அம்மா உங்களைப் போல் இவ்வுலகில் ஓர் அன்னை
ஞாலத்தில் நாம் இனிமேல் காணமாட்டோம் இது உண்மை
என்றலவ்வா சொல்லிச்சொல்லி உங்கள் பிள்ளைகள்
கதறுகிறார்கள் கலங்குகிறார்கள்
பெருமையுடன் மருமக்கள் சீரித்து மகிழ்ந்திருக்க
மாமியார் என்ற வீம்பு இன்றி அன்னையாய் இருந்தீர்கள்
கொடுமையான காலனவன் கொண்டுபோன சேதி கேட்டு
மருண்டே நிற்கிறார்கள் மருமக்கள் எல்லாம் ஒன்று கூடி
பேரப்பிள்ளைகள் வாழ்வு சிறக்க வேண்டும் என்றெண்ணி
போராட்டம் பல செய்து வென்றவர் நீங்கள்
பார்போற்ற வாழ்கின்றனர் பேரர்கள் இன்று
பதறுகிறார்கள் பாரினிலே நீங்கள் இல்லை என்று
பூட்டாச்சி பூட்டாச்சி என்று குழந்தைகள் புலம்ப
பூலோகம் விட்டு ஓடோடிச் சென்றதேனோ?
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த பொற்காலம்
மண்விட்டு மறைந்து விண்ணோக்கிச் சென்றாலும்
கண்விட்டு மறையாமல் உங்கள் நினைவலைகள்
எம்முன்னே வந்து நின்று கன காலம் உயிர்வாழும்
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், துயர் பகிர்ந்தவர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள். அயலவர்கள் மற்றும் தேவையான உதவிகளைச் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 09.10.2021 சனிக்கிழமை அன்று அந்தியேட்டி நிகழ்வுகள் அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.