Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 03 OCT 1967
மறைவு 13 JUL 2021
அமரர் பரலோகசிங்கம் நடராஜா (லோகன்)
GTA Towing உரிமையாளர்
வயது 53
அமரர் பரலோகசிங்கம் நடராஜா 1967 - 2021 அனலைதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரலோகசிங்கம் நடராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ?
 ஒவ்வொரு நிமிடமும் உம் நினைவுதான் அப்பா!
 ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - அப்பா
 என அழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா!

நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
 ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
 சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
 இறைவன் நமக்களித்த
வரமாக நீங்கள் இருந்தீர்கள்!

புன்னகை புரியும் உம் முகம் தெரிகிறது
 தினமும் ஆனாலும் அது
 உண்மை இல்லை என்று
நினைத்தவுடன் எம் மனம் கலங்குகிறது!

உதிர்ந்து நீங்கள் போனாலும் உருக்கும்
 உம் நினைவுகள் - எம் உள்ளத்தில்
 என்றென்றும் உறைந்திருக்கும் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 15 Jul, 2021
நன்றி நவிலல் Thu, 12 Aug, 2021