யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பூதவராயர் கோவில் ஒழுங்கை , பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட சுசீலாதேவி பஞ்சலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
மாதமொன்று போனதம்மா
மாறமுடியவில்லை உன்நினைவிலிருந்து
அழியாத நினைவலைகள் எம்அடிமனதில்
ஆழ்த்துளைக்கிறதம்மா
பாசம் காட்டி வளர்த்த எம்மை விட்டு
பட்டென்று போனதேனோ
திக்கு திசையறியாது - உன்மக்கள்
திண்டாடி நிற்கிறோமே
நினைவில் எம்முடனும்
நிஜத்தில் இறைவனிடமும் கலந்திட்ட
உங்கள் ஆத்மா ஈசனிடம் இளைப்பாற
இறைவனிடம் இறைஞ்சுகிறோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
எமது குடும்பத் தெய்வத்தின் பிரிவுச்செய்தி கேட்டு எமது இல்லத்திற்கு ஓடோடி வந்து எமது துன்பம் பகிர்ந்து கொண்டோர்க்கும், தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியவர்களுக்கும், இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலித்துண்டு பிரசுரம் வெளியிட்டோர்க்கும் குறிப்பறிந்து சகல தேவைகளையும் நிறைவேற்றிய உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக எம் இதய பூர்வமான நன்றியினை மொழிகின்றோம்.