Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 26 MAY 1967
இறப்பு 28 JUL 2026
திரு பஞ்சலிங்கம் ஶ்ரீபாலன்
வயது 59
திரு பஞ்சலிங்கம் ஶ்ரீபாலன் 1967 - 2026 தாவடி தெற்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். தாவடி தெற்கு கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சலிங்கம் ஶ்ரீபாலன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நாட்கள் 31 கரைந்தோடிய போதும்
உங்கள் நினைவுகள் என்றும்
எங்களை விட்டு அகலவில்லை..
.

எங்களை எல்லாம் தவிக்க விட்டு
நீர் தூரமாய் சென்றதென்ன?
எங்கள் முகம் காண வருவாயா ஓர் கணமே?

கலங்கும் கண்களுடன் கனத்த இதயத்துடன்
 நாங்கள் உம் முகம் தேடி குரல் தேடி
வேதனையில் ஏங்கித் தவிக்கின்றோம்
 காலங்கள் கடந்து சென்றாலும்,
ஒவ்வொரு நொடிகளிலும்
 இதயத்தின் துடிப்புப் போல்,
அருகிலே நீ
ங்கள் வாழ்வதை நாம் உணர்கிறோம்

கடலுடன் என்றுமே வாழும் அலைகள் போல்
எமது உயிரில் கலந்த எம் உறவே..!
உன் ஞாபகங்கள் வானத்தில் உள்ள மேகம் போல்
 என்றுமே அழியாது, எமது உயிரே..!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 25-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெறும், அதனைத்தொடர்ந்து 27-08-2026 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பத்தினர் வருகை தந்து நடைபெறும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
தாவடி,
கொக்குவில்.

இங்ஙனம், பஞ்சலிங்கம் ஶ்ரீபாலன் குடும்பத்தினர் மற்றும் கலாரஞ்சினி(மைத்துனி)
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.