யாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mantes-la-ville வை வதிவிடமாகவும் கொண்ட பஞ்சலிங்கம் தவமணி அவர்களின் நன்றி நவிலல்.
31 நாட்கள் நகர்ந்தாலும்
நம்மைவிட்டு அகலாது உங்கள் நினைவு
நினைவுகள் வருகையில்
நிலைகுலைந்து போகின்றோம் அம்மா
உங்களை நினைக்காத நொடிகளில்லை
அன்பினால் பன்பினால் நட்பினால்
ஆளுமையால் எங்கள் அனைவரது
உள்ளங்களில் குடியிருக்கும்
எம் அன்னையை நாம்
என்றென்றும் நினைத்திருப்போம்
அன்னையின் ஆத்மா
இறை பாதம் சரணடைய
பிரார்த்திப்போமாக
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல்: நடேஸ்