3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் விஸ்வலிங்கம் பஞ்சலிங்கதுரை
பிரபல தொழிலதிபர்
வயது 76
அமரர் விஸ்வலிங்கம் பஞ்சலிங்கதுரை
1947 -
2023
புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
60
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், இங்கிலாந்து Hampshire Fareham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த விஸ்வலிங்கம் பஞ்சலிங்கதுரை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று போனாலும்
அழியவில்லை உங்கள் நினைவு
அன்பின் உறைவிடமாகவும் பாசத்தின் சிகரமாகவும்
வாழ்ந்த எம் அன்புத் தெய்வமே
நீங்கள் வாழ்ந்த இவ்வுலகில்
எமை வாழவைக்க ஓயாதுழைத்து
இப்போ ஓய்வெடுத்துக் கொண்டீர்களே
உங்கள் ஈடில்லா பாசத்திற்கு
எங்கள் கண்ணீர் இணையாகுமா ?
உருண்டு புரண்டு அழுகிறோம்
உங்கள் செவிக்கு கேக்கவில்லையா ?
மூன்றாண்டு அல்ல எத்தனை ஆண்டுகள்
ஓடி மறைந்தாலும் எங்கள் நெஞ்சிருக்கும் வரை
உங்கள் நினைவிருக்கும் அப்பா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்