2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் விஸ்வலிங்கம் பஞ்சலிங்கதுரை
பிரபல தொழிலதிபர்
வயது 76

அமரர் விஸ்வலிங்கம் பஞ்சலிங்கதுரை
1947 -
2023
புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
60
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், இங்கிலாந்து Hampshire Fareham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த விஸ்வலிங்கம் பஞ்சலிங்கதுரை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் ஒளி விளக்காய்
குவலயத்தே மிளிர்ந்தீர்கள்
அன்பு அப்பாவே
நீங்கள் எமைப் பிரிந்து
ஆண்டு இரண்டாகி விட்டது
கண்ணிற்கு இமைபோல
எமைக்காத்திருந்த தெய்வமே
கண்ணிமைக்கும் நேரத்தில்
எமைப்பிரிந்து சென்றீரோ
கனவிலும் நினைவிலும் நிதம்
நினைத்து வாடுகின்றோம்
தந்தை எனும் ஓர் சொல்லை
சொல்லிடவே நா துடிக்கிறதே
நீ இல்லை எனும் ஓர் உண்மை
இன்னும் எனக்கு புரியலையே..!
ஈராண்டு போனது ஆனால் ஒரு நாள்
போனது போல் நாங்கள்
எல்லாம் துடிக்கின்றோம்!
தேடுகிறோம் உமை கனவுகளில்
என்றும் சுமந்தபடி..!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
Saieja Second daughter - Founder Miss Tamil UK and Europe.