

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Oberburg ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பழனித்துரை தேவநாதன் அவர்களின்31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நேற்றிருந்தாய் எம்முடனே நிம்மதியாய் நாமிருந்தோம்
கூற்றுவனின் வழித்தடத்தில் சென்றுவிட்டாய் இன்று நீ
கூத்தனவன் காலடியில் ஒய்வுதனை நாடி விட்டாய்
கூப்பிய கரத்துடனே இறைஞ்சுகிறோம் நம்சிவனை
அவனடியில் நின்னான்மா நித்தியமாய் சாந்திபெற
ஓம் சாந்தி!
அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எமது இல்லங்களிற்க்கு நேரில் வந்தும், தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள், ஊடாகவும் தமது இரங்கல்களையும், ஆறுதல்களையும் தெரிவித்தவர்களுக்கும் இறுதிச்சடங்கில் பங்கு கொண்டவர்களுக்கும் மேலும் பல வழிகளில் எமக்கு உதவிய உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன் ஓம்சாந்தி. -சுவிஸ்ரஞ்சன் குடும்பம் OBERBURG.