

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Oberburg ஐ வதிவிடமாகவும் கொண்ட பழனித்துரை தேவநாதன் அவர்கள் 29-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பழனித்துரை, மகேஸ்வரி தம்பதிகளின் இளைய மகனும், சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் பவளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரெஜினா(தேவா- சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
காருஜன், மாறுஜா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
நற்குணநாதன்(சுவிஸ்), சுபாஜினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுமணா, ஜீவா, காலஞ்சென்றவர்களான புஸ்பதேவி, விக்கினேஸ்வரன் மற்றும் பாமினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அரிகரன், அனுஜன், டிலேகா, சிந்து, ஐங்கரன், சுகிர்தா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கௌதமி, சிறி, சுஜீவா, ஜீவனா, பிருந்தாபன், நர்திகா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
மித்திராதேவி, திருசிகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 01-12-2020 செவ்வாய்க்கிழமை முதல் 02-12-2020 புதன்கிழமை வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 03-12-2020 வியாழக்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெறும். அன்னாரின் இறுதிக்கிரியையில் 50 பேர் மட்டுமே பங்கு பெறுவதில் குடும்ப உறுப்பினர்கள் தவிர்த்து ஏனையோர் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம். தங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன் ஓம்சாந்தி. -சுவிஸ்ரஞ்சன் குடும்பம் OBERBURG.