யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve வை வசிப்பிடமாகவும் கொண்ட பகீஸ்வரன் சாருஜன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
மாதம் ஒன்றாகியும் மாறவில்லை
உன் மறைவு வலி
உன் சட சட பேச்சும்
உதட்டோரப் புன்னகையும்
என்றும் எம் மனங்களில் வீற்றிருக்கும்!
நாம் கண் தூங்க நினைத்தாலும்
விழிமடல் முழுதும் நீ தானே!
நிறைந்து நிற்கின்றாய்
நீண்டு நீ வாழ வேண்டும்
என்றே தானே நாம் விழித்திருந்தோம்
இடை நடுவில் எமைப் பிரிய
நாம் என்ன பாவம் செய்தோமோ?
மீண்டும் நீ வந்திட
ஒரு விந்தை தான் நிகழாதோ?
வித்துடல் மறைந்தாலும்
உன் நினைவுகள்
என்றும் எம்முள் புதைந்திருக்கும்!!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Kanneeril nanaikirom milathuyaril vadukirom