யாழ். காரைநகர் முல்லைப்பிலவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்ட பகவற்சிங் தவராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நீங்காத நினைவு தந்து- நீ
நீண்ட தூரம் சென்றதேனோ?
கண்மூடி விழிப்பதற்குள் கனப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம்
தானா - என்று
நினைக்கும்
முன்னே நீ மறைந்தது ஏனோ?
விழி நீர் துடைக்கவும்
உன் கரங்கள் தான்
இல்லையன்றோ
கண்ட பல கனவிலும்
வந்து வந்து போகுதடா
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும் உன்
நிலவு முகம் தேயாதடா!
உதிர்ந்து
நீ போனாலும் உருக்கும்
உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில்
என்றென்றும் உறைந்திருக்கும்
உன் பிரிவினால்
வாடும் குடும்பத்தினர்..!!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி அந்தியேட்டி நிகழ்வு 03-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் பின்னர் 04-08-2025 திங்கட்கிழமை அன்று வீட்டுக்கிரியைகள் நடைபெறும் அதனைத் தொடர்ந்து பி.ப 01:00 மணியளவில் நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
Treuenbrietzener Str,
12, 13439 Berlin, Germany.
Rip uncle😭