1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பாக்கியநாதன் தெய்வானை
வயது 80

அமரர் பாக்கியநாதன் தெய்வானை
1940 -
2021
பெரியபுளியங்குளம், Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
வவுனியா பெரியபுளியாளங்குளம் செட்டிகுளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஈச்சங்குளம், வைரவபுளியங்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாக்கியநாதன் தெய்வானை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா என்று அழைத்திட யாருண்டு
உயிராய் உனை நேசித்தோம்
உயிரினும் மேலாய் எமை நேசித்தீர்
வேதனையைச் சொல்லிட
வார்த்தைகள் இல்லையம்மா
வாழ்வில் பல உறவுகள் இருந்தாலும்
எம் தாய்க்கு நிகர் யாரோ
ஒரு பொழுதும் உமை
மறவாமல் நாம் இருந்தோம்
ஓயாது உம் குரல் இனிமை எதிரொலிக்க
ஒவ்வொரு கணமும் நினைத்து
நினைத்து அழுகின்றோம்...
நீங்கள் எங்களை விட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள் அன்பு முகம்
எம் நெஞ்சில் நிலைத்து நிற்கும்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிராத்திக்கின்றோம்...
ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்