Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 APR 1940
இறப்பு 05 FEB 2021
அமரர் பாக்கியநாதன் தெய்வானை 1940 - 2021 பெரியபுளியங்குளம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

 வவுனியா பெரியபுளியாளங்குளம் செட்டிகுளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஈச்சங்குளம், வைரவபுளியங்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியநாதன் தெய்வானை அவர்கள் 05-02-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோபாலசிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னையா பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பாக்கியநாதனன்(முன்னாள் செட்டிகுளம் கிராம சேவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ரோகினி(இலங்கை), காலஞ்சென்ற றஞ்சினி, ரேவதி, ரவீந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவசுப்பிரமணியம், சிவாயினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம், நடராசா மற்றும் சிற்றம்பலம், சரஸ்வதி, அன்னலக்ஸ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராசநாயகம், செல்வநாயகம், தெய்வானை, வினாயகமூர்த்தி மற்றும் மனோன்மணி, செல்லமணி, கனகசபை(லன்டன்), சத்தியகீர்த்தி(லன்டன்), காராளசிங்கம், காலஞ்சென்ற ரத்தினம், உலகேஸ்வரி, சந்திராதேவி, Dr.முத்துலிங்கம்(வவுனியா), அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிரிதர்சன், ஜன்னனி, அஸ்வினி, சாருகா, மாதுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அதிரா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2021 ஞாயற்றுக்கிழமை அன்று வவுனியாவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்