Clicky

தோற்றம் 08 JUL 1939
மறைவு 28 SEP 2019
அமரர் உலகநாதர் பாலசுப்பிரமணியம்
ஓய்வுபெற்ற நில அளவையாளர்
வயது 80
அமரர் உலகநாதர் பாலசுப்பிரமணியம் 1939 - 2019 துன்னாலை மத்தி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இருக்கும் வரை தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் வாழ்ந்துவிட்டு இறுதியில் எங்களுக்கு அவற்றை எல்லாம் தந்துவிட்டு நீங்கள் இறைவனடி போய் சேர்ந்து விட்டிர்கள்! நீங்கள் தைரியம் கொடுத்து வளர்த்த பிள்ளை அருகில் இருந்து வழி அனுப்பி வைத்தது உங்களுக்கு ஓரளவு ஆறுதலை தந்திருக்கும்.  அன்று நான் என் அம்மாவைப்பிரிந்து முதல் தடவை வீட்டிற்கு வரும்போது நீங்கள் தான் வாசலில் இருந்து என்னை சமாதானப்படுத்தினீர்கள், அன்று என்னைப்பார்த்து "அம்மாவும் போய்ட்டா" என்று சொன்ன படியே என்னை சமாதானப்படுத்தியது அந்த தருணத்தில் நான் நினைத்ததை நீங்கள் சொன்னது போல எதிரொலித்தது என் மனதில் இன்றும் இடும்பிடித்துள்ளது. 1995இல் எல்லோரும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறும் போது நீங்களோ சோமு அண்ணாவுடன் துன்னாலையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்து  உங்கள் உயிரைப்பற்றி யோசிக்காது எங்களை யாழ்ப்பாணத்தில் இருந்து மீட்டுக்கொண்டு துன்னாலைக்கு அழைத்து கொண்டு போனது உங்கள் தைரியத்தின் வெளிப்பாடு! நீங்கள் துன்னாலையில் மரக்கறி தோட்டம் செய்து எல்லாருக்கும் பகிர்ந்து , மாடு வைத்து பால் கறந்து அதையும் எல்லாரும் பகிர்ந்து மற்றவரிடம் எதிர்பார்க்காமல் அனால் மற்றவருக்கு உதவி செய்த்து உங்கள் தன்னம்பிக்கைக்குக்கு வெளிப்பாடு! இன்று நீங்கள் இங்கு இல்லாவிட்டிலும் நீங்கள் விட்டுப்போன இந்த நல்ல பழக்கங்கள் எங்களுடன் மட்டும் அன்றி பல்வேறு தலைமுறை கடந்து தழைத்து கொண்டே இருக்கும்! உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும். உங்கள் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
Write Tribute