

யாழ். துன்னாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தெல்லிப்பழையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட உலகநாதர் பாலசுப்பிரமணியம் அவர்கள் 28-09-2019 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான உலகநாதர் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மதனகாமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயபாலன்(ஐக்கிய இராச்சியம்), ஜெயவனிதா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. தர்மினி(ஐக்கிய இராச்சியம்), இராஜகணபதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பத்மாசனி, ஞானாம்பிகை, செல்வி அழகு இரத்தினம், கமலாம்பிகை மற்றும் உலகேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணேசமூர்த்தி(ஓய்வுபெற்ற மாவட்ட முகாமையாளர்- இலங்கை வங்கி), காலஞ்சென்றவர்களான கனகசபை, நடேசபிள்ளை, இராசையா, நடராஜா, தியாகராஜா, சிவராஜா மற்றும் சரஸ்வதி, மகேஸ்வரி, சாம்பமூர்த்தி, சுந்தரமூர்த்தி(பிரான்ஸ்), Dr. ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிருத்திகா(ஐக்கிய இராச்சியம்), நயனேஸ்(ஐக்கிய இராச்சியம்), அபிநயா(கனடா), திலக்சனா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளாவில் தெல்லிப்பழையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் துன்னாலை தியான்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our condolences. It was an honor to have known such a great person and we will truly miss. May God embrace you in comfort during this difficult time.டா