2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
36
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த நோயல் ரைற்றஸ் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நிழல்போல் இருந்தவன் நீ
நினைவாய் மாறினாய்...!
கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணீர் துளியாகினாய்...!!
இதயங்களெல்லாம் நொறுங்க,
இமைகளெல்லாம் நனைய,
எங்களை தவிக்கவிட்டு
எங்கோ நீ பயணமானாய்...!!
நேற்றுப் போல இருக்கின்றது
காலனிடம் உனை
தோற்றுப்போய் பறிகொடுத்து,
பரிதவித்து நிற்கின்றோம்…!
கடல்கடந்து சென்றபோதும்
கரை தட்டிடாதது உனது நட்பு
விரைவாக எங்களை நீ
விட்டுச் சென்றதேனோ?
என்றாவது ஒருநாள்,
எங்கோ ஓரிடத்தில்
நாம் சந்தித்துக் கொள்வோம்...!
எம் நட்புக்கு என்றும் மரணமில்லை...!!
தகவல்:
ஜெயபால்(நண்பன்)