1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அம்பிகாதேவி நித்தியானந்தன்
வயது 69
அமரர் அம்பிகாதேவி நித்தியானந்தன்
1952 -
2021
புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Backnang ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அம்பிகாதேவி நித்தியானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னைக்கு அடுத்தவளாய்
அன்புடனே அரவணைத்து பண்புடனே
வாழவைத்த உம்மை மீளவைக்க முடியவில்லையே
எம் அன்புச் சகோதரியே!
மூத்தவளே எம்மை காத்தவளே
உம்மை நாமிழந்து ஓராண்டானதம்மா!
நெற்றியின் நெறியிழந்து
உற்ற தனி தனயனிழந்து
சொத்து
சுகமுமிழந்து
துக்கத்தில் துயிலிழந்து
பற்றிய நோயினால்
எம்மை
பரிதவிக்கவிட்டுச் சென்றாயோ!
சுமை கூடி இமை மூடினாயோ!
உம்மை எப்போ காண்போமோ!
என்றென்றும் உங்கள் நினைவுடன்
வாழும் உற்றார் உறவினர்கள்
என்றும் எங்கள் இதய அஞ்சலிகள்...
தகவல்:
குடும்பத்தினர்