யாழ். அம்பன் குடத்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நித்தியானந்தம் லங்கநாதன் அவர்களின் நன்றி நவிலல்.
பொதுப்பணியின் பொக்கிஷமே - எங்கள்
லங்கநாதனே
பாச உறவுகள் எமை விட்டு
பார் விட்டு சென்றதேனோ
எல்லோரையும் அன்புடன் மதிக்கும்
எங்கள் நாதனே
உதவி என்றால் உடன்
நிற்பீர் அவ்விடத்தில்
பேச்சினாலும் செயலினாலும் அனைவரையும்
கவரும் நாதனே
ஆழமாய் எம் மனதில் பதிந்து விட்டீர்
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகியும் போய்விட்டது
பழகிய நாட்களை எப்படி மறப்பது
அன்பு மொழி பேசி வாழ்ந்தீர்
அனைவருடனும் பண்புடனே பழகினீரே
சுற்றம் கூவி அழைக்கின்றோம் உம்மை
காற்றுள்ள வரை கரையாது
லங்கநாதனே உம் பணி...........
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 07-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் வீட்டுக்கிருத்திய கிரியைகள் 09-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று எமது இல்லத்தில் நடைபெற இருக்கும் மதியபோசன நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயருற்ரிருக்கும் குடும்பத்தினருக்கும்,உற்றார்,உறவினர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம். “அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்...