

வைத்தீஸ்வர வித்தியாலயத்தின் பழையமாணவர் குழுமத்தின் முன்னோடியும் ,கனடா பழைய மாணவர் குழுமகாரியதரிசியுமான , திருமதி ஸ்ரீரங்கநாயகி ஸ்ரீ சற்குருநாதன் அவர்களின், தாயார் திருமதி நித்தியலட்சுமி சோமசுந்தரம் அவர்களின் இறுதி யாத்திரையில் அவுஸ்திரேலியா பழைய மாணவர் குழுமம் பங்கேற்பதோடு , கண்ணீருடன், இவ்விரங்கல் மடலினை ஆழ்ந்த கவலையுடன் சமர்ப்பிக்கின்றது . காலம் சென்ற திருமதி நித்தியலட்சுமி சோமசுந்தரம் அவர்கள், எமது பாடசாலையின் பழைய மாணவி , என்பதோடு அவரது துணைவர் திரு சோமசுந்தரம் அவர்கள் எமது பாடசாலையில் , நீண்ட கால சேவையாற்றிய கணக்காளர் என்பதும் , தம் பிள்ளைகளை எமது பாடசாலையில் கற்பித்திருந்தனர் என்பதும் நினைவுகூரத்தக்கது. திருமதி நித்தியலட்சுமி சோமசுந்தரம் குடும்பத்தாருக்கு அவுஸ்திரேலியா பழைய மாணவர் குழுமம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றது. இவ்வண்ணம் வைத்தீஸ்வரா பழைய மாணவர் குழுமம் அவுஸ்திரேலியா
