யாழ். சங்கரத்தை, வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நிர்மலா மகாலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
மாதம் ஒன்று ஆனதம்மா
ஆறவில்லை எங்கள் மனம்
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அம்மா உங்கள் அன்பிற்கு ஈடாகுமா..
இனி வர மாட்டீர்கள் எனத் தெரிந்தும் கூட
எப்போ வருவீர்கள் என ஏங்கும் மனதில்
எப்போது உறைக்கப் போகுது
"இல்லை" எனும் உண்மை...?
நித்தமும் உங்களை நினைத்து
நிழல் தேடி அலைகின்றோம்
நிலையில்லா இவ்வுலகை விட்டு நீள்துயில் கொண்ட
உங்களின் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
I will miss you so much Nirmi Aunty!! You were always so positive and always had a smile on your face!! You will always be with us forever!