

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரமேஸ்குமார் றொசாய்ரோ அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நாட்கள் தானே...!
எப்படியோ நகர்ந்து போனது!
நாங்கள் மட்டும் அப்படியே உறைந்து போனதேன்..?
நான்கு வருடம் கடந்ததென்று தேதி சொல்லுது
உறங்க சென்ற நீ மட்டும் எழும்ப மறந்ததேன்!
நிழல்போல் இருந்தவன் நீ
நினைவாய் மாறினாய்
கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணீர் துளியானாய்!
இதயங்களெல்லாம் நொறுங்க
இமைகளெல்லாம் நனைய
எங்களைத் தவிக்கவிட்டு எங்கோ நீ பயணமானாய்...!
காற்று வந்து காதில் ஏதோ சொல்லிப் போகுது
பார்க்கும் இடமெல்லாம் உன் குரலே கேட்குது
கடந்தகாலம் எங்களிற்கு கனவாய் போனது
எதிர்காலம் இப்படியேன் இருட்டாய் ஆனது?
எப்பொழுதும் இக்கேள்வியுடன்
ஆறாத்துயருடன் வாழும்
என்றும் உங்கள் பிரிவால் வாடும் தாய், மனைவி,
சகோதரர், சகோதரிகள், பெச்சு மாமா,
பூவம்மா, சித்தி, பாலா அங்கிள், பெறாமக்கள்
மைத்துனர், மைத்துனிகள், உற்றார், உறவினர், நண்பர்கள்