யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரமேஸ்குமார் றொசாய்ரோ அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்மை ஆறாத்துயிரில் ஆழ்த்திவிட்டு..
மீளாத்துயில் கொண்ட எங்கள் ரமா..!!
பூத்துக் குலுங்கிய எங்கள் குடும்பம் இன்று
கண்ணீர் பூக்களாய் நிறைந்து விட்டதையா
எங்கள் குலவிளக்கே நீங்கள் இல்லாத
எங்கள் குடும்பம் இருள் சூழ்ந்து விட்டதையா!
எங்கு பார்த்தாலும் உங்கள் புன்னகையும்
உங்கள் முகமும் தான் தெரியுதையா!
உங்கள் அம்மா அழுதால் தாங்காத நீங்கள்?
இன்று உங்கள் முகத்தைப் புகைப்படத்தில் பார்த்து
கதறி அழவைத்து கண்ணீரை தந்து விட்டு
எங்கே சென்றாய் ஐயா?
எங்கள் இதயத்தோட்டத்தில்
ஓயாது பூக்கிறது சோகம்!
எந்நேரமும் தண்ணீர் பாய்ச்சுகின்றது
எங்கள் இருவிழிகள்!
ஆலம் விழுதுகள் போல் மாமா, சித்தப்பா, பெரியப்பா என
ஆயிரம் உறவு கொண்டு, குடும்ப
உறவுகள் வீழ்ந்து விடாதிருக்க
வேரென இருந்த உங்களை, மாயப்புயல் வடிவில்
காலனவன் வந்து உங்கள் உயிர்பறிக்க, சோகத்தை தந்துவிட்டு
சொல்லாமல் சென்றதென்ன எங்கள் ரமா மாமா
தேடினோம் திசையெங்கும்
உங்கள் உருவம் தெரியவில்லை
ஓடினோம் தெருவெங்கும்
உங்கள் முகத்தைக் காணவில்லை
நீங்கள் எங்களை விட்டுப்பிரிந்த போதும்
உங்கள் ஆன்மா சாந்திக்காக தினம் தினம்
ஆண்டவனை வேண்டுகிறோம்
எங்கள் ரமாவுக்கு நித்திய இளைப்பாற்றியை
கொடுத்தருளும் ஆண்டவரே!
உங்கள் பிரிவால் துடி துடிக்கும் உங்கள் தாய், மனைவி,
சகோதரர், சகோதரிகள், பெச்சு மாமா,
பூவம்மா, சித்தி, பாலா அங்கிள், பெறாமக்கள்
மைத்துனர், மைத்துனிகள், உற்றார், உறவினர், நண்பர்கள்