Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 23 DEC 1961
இறப்பு 25 FEB 2025
அமரர் நெல்லிநாதன் திருமுருகானந்தன்
வயது 63
அமரர் நெல்லிநாதன் திருமுருகானந்தன் 1961 - 2025 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா California வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நெல்லிநாதன் திருமுருகானந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

குடும்பத்தின் ஒளி விளக்காய்
குவலயத்தே மிளிர்ந்தீர்கள்
கூரறிவு கொண்டவராய்
எமையென்றும் வளர்த்தீர்கள்
அன்பு அப்பாவே நீங்கள் எமைப்பிரிந்து

இன்றும் உங்கள் பிரிவால் 
எங்கள் இதயம் கலங்குகின்றது!
எங்கள் குடும்ப குல விளக்கு அணைந்ததை
எண்ணி மெழுகாய்
உருகுகின்றோம் 
சகோதரனே ..!

அளவில்லா அன்பையும்
அளக்க முடியாத பாசத்தையும்
அளவில்லாமல் கொடுத்து விட்டு
எங்கு தான் சென்றாயோ?

ஆண்டு ஒன்றாகி விட்டது
ஆயிரம் ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா என்று அழைக்க
நீங்கள் இப் பூவுலகில் இல்லை
ஆலமரமாய் நின்று எம்மை அரவணைத்தீர்கள்

என்றும் எம்நெஞ்சங்களில் நிறைந்து இருப்பீர்கள்
தெய்வத்தோடு தெய்வமாய் நின்று
உங்கள் செல்வங்களை காத்திருப்பீர்கள்
உங்கள் ஆத்மா சாந்திபெற மலர் தூவி
வணங்குகின்றோம்...

ஒம் சாந்தி! ஒம் சாந்தி! ஒம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்